Sunday, October 09, 2011

கணினி துறையில் சாதித்த (பெயர்கள்) நிறுவனங்கள்(Most Popular Computer industry )

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் கணினி துறைகளில் பல நிறுவனங்கள் சாதித்து வருகின்றன. இன்று மனிதர்களின் நாகரீகத்தை உயர்த்துவதிலும், அவர்களின் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்துவதிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பாரிய சேவைகளைச் செய்து வருகின்றது. ஒவ்வொரு நிறுவனங்களும் தாங்கள்தான் துறைசார்ந்த வல்லுநர்கள் என்பதை நிரூபிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு கணினி மென்பொருள், வன்பொருள் விடயங்களில் தமது ஆதிக்கங்களை இன்றும் கூட தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றன. இவற்றில் Microsoft, google, yahoo என மிகப்பிரபல்யம் பெற்ற நிறுவனங்களுடன் இன்னும் சில நிறுவனங்கள் போட்டி போடுவது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையே காட்டுகின்றன.
01. Adobe 
அடோப் சிஸ்டம்ஸ் இன்கோப்ரேட்டட் அமெரிக்காவில் உள்ள கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது கலிபோர்னியாவில், சான் ஹுசேவைத் தலைமையகமாகக் கொண்டது. இந்த நிறுவனம் பல்லூடகம் மற்றும் படைப்பாக்க மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. சமீபகாலமாக இணையதள பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கத்தில் சிறப்பான வகையில் ஈடுபட்டு வருகிறது.
1982ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜான் வார்னர் மற்றும் சார்ல்ஸ் ஜெஸ்க் என்பவர்களால் அடோப் நிறுவனம் உருவாக்கப்பட்டது. அடொப் (ADOBE)  என்ற இந்த பெயர் ஒரு நதியின் பெயராகும். இந்த நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஜான் வார்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்கு பின்புறம் அடோப் என்ற நதி ஒன்று ஓடுகிறது. அதன் பெயரையே இதற்கு சூட்டியுள்ளனர்.
ஜான் வார்னர் மற்றும் சால்லஸ் ஜெஸ்க் Xerox PARC என்ற நிறுவனத்தை விட்டு விலகி இந்நிறுவனத்தை உருவாக்கினர். 1985ம் ஆண்டு அப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் போஸ்ட் ஸ்க்ரிப்டு தொழில்நுட்பத்தின் உரிமத்தைப் பெற்று, அதனை தனது அச்சியந்திரங்களுக்குப் பயன்படுத்தியது. இது மேசைத்தள (Desktop) பிரசுரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிறுவனத்தில் சுமார் 8000 ற்கும் மேற்பட்டபவர்கள் பணியாற்றுகின்றனர்.
டிசம்பர் 2005ம் ஆண்டு அடொப் தனது போட்டி நிறுவனமான மெக்ரோமீடியாவை வகைப்படுத்தியது. மேலும் Adobe cold fusion, Adobe Dream weaver, Adobe Flash, Adobe Photoshop, Adobe PageMaker  என இதன் மென்பொருள் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
02. Apple (அப்பிள்)
அப்பிள் நிறுவனத்தின் முந்தைய பெயர் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் என்றே அழைக்கப்பட்டது. மிகச்சாதுர்யமான தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்து வெளியிடும் இந்நிறுவனத்தின் பெயர் வந்த வரலாறு சுவாரஸ்யமானதாகும். அப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் “Bite in to Apple” என்பதுதான், இந்நிறுவ னத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்லோகன் “Think Different” என்பதே. எனவே இரண்டையும் கலந்து வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்நிறுவனத்தை நிறுவிய “ஸ்டீவ் ஜொப்ஸ்” அப்பிள் கொம்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். மேலும் ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பனிக்கு சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு அப்பிள் கம்ப்யூட்டர் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும், வேடிக்கைகாவும் மிரட்டி உள்ளார்.
ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் அப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே இறுதியில் பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்து விட்டது.
இவ்வாறு பெயர் கொண்ட அப்பிள் நிறுவனமானது ஒரு அமெரிக்க கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்நிறுவனமானது 1976ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி குபெர்டினோ, கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
கணினி மாத்திரமன்றி ஐ-பொட், ஐ-போன் போன்ற நுகர்வோர் இலத்திரனியில் கருவிகள் மற்றும் மெக் ஒபரேட்டிங் சிஸ்டம், பைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது. இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக “ஸ்டீவ் ஜாப்ஸ்” விளங்குகிறார். இந்நிறுவனத்தில் சுமாராக 49,500 பேர் வேலை செய்கிறார்கள்.
03. Google (கூகிள்)
கூகிள் அல்லது கூகுள் என்பது அமெரிக்காவிலுள்ள ஓர் பன்னாட்டு நிறுவனமாகும். இணைய தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பர தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் செயல்படுகிறது. கூகிள் தேடுபொறியானது இதன் முதன்மையான சேவையாகக் காணப்படுகின்றது.
1998ம் ஆண்டு செப்டம்பர் 07ம் திகதி மென்லோபார்க் கலிபோர்னியாவில் லாரி பேஜ், செர்ஜி பிரின் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. கூகிளின் பெயர் கூட வித்தியாசமான முறையில் கிடைக்கப்பட்ட ஒன்றாகும். சேர்ச் எஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது,
இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “Google”  என்ற சொல்லை முதலில் வைத்தனர்.
இந்த சொல் லட்சம், கோடி என்பது போல மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் எழுத்துப்பிழை ஏற்பட நமக்கு “Google”  என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நி றுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தவில்லை. ஸ்டான்ட் போர்ட். எனினும் இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான “ப்ரஜக்ட் ரிப்போட்டினை தயாரித்து ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர் அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் “Google”  எனத் தவறாக எழுதப் போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி, இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
இன்று கூகில் இல்லையேல் தேடல் இல்லை என்ற அளவுக்கு நிலைமையை மாற்றிவிட்டனர்.
04. Hot mail (ஹொட்மெயில்)
ஹொட்மெயில் ஆனது 1995ம் ஆண்டு இந்தியா சண்டிகாரைச் சேர் ந்த சபீர் பாத்திமா மற்றும் அமெரிக்கரான ஜக் ஸ்மித் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
இது வர்த்தகரீதியாக அமெரிக்காவின் சுதந்திர தினமான 4 ஜூலை 1996ம் ஆண்டு இணைய சேவை வழங்குநர்களிடமிருந்து சுதந்திரம் எனும் தொனியில் வெளியிட்டார்கள். hot mail   என்பது வலைத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்னஞ்சல் சேவையாகும்.
இவ்வாறாக வலைத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு, வலை உலாவி மூலம் பயன்படுத்தக் கூடியதாக உருவான உலகின் முதல் மின்னஞ்சல் சேவையும் இதுவேயாகும்.
hot mail   என்ற பெயர் வந்ததும் கூட புத்திசாதுர்யமான சுவாரசியமான விடயம் ஆகும். ஜாக் ஸ்மித் இணையம் வழியாக இமெயில் களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித் துள்ளார்.
அதாவது இணைய இணைப்புத் தரும் இண்டர் சேர்விஸ் புரவைடர் துணையின்றி அவர்கள் சேர்வரில் இடம் கேட்டு வாங்கி, இ-மெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப்சேவரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்து பல காலம் சிந்தித்து ஹொட்மெயிலை வடிவமைத்தார். சபீர் பாட்டியாவும் இதற்குப் பல பெயர்களை எழுதிப்பார்த்தார்.
எந்தப் பெயராக இருந்தாலும் அது மெய்ல் (Mail) என முடிய வேண்டும். என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியில் Hot Mail  என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார்.
ஏனென்றால் இணையத்தில் வெப்பக்கங்களில் பயன்படுத்தப் படும் புரோகிராமிங் மொழியினை சிஹிணிழி HTML (Hyper Text Markup language) என அழைக்கிறோம். Hotmail  என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹொட்மெயில் என அழைத்தனர்.
5. Microsoft (மைக்ரோசொப்ட்)
Micro Computer மற்றும் Software என இரண் டையும் இணைத்து இந்தப் பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில்கேட்ஸ் தன் சகாவான போல் அலன் என்பவருக்கு 1975ம் ஆண்டு நவம்பர் 29ல் எழுதிய கடிதத்தில் Micro-Soft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம்.
அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்று சூட்டும் பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். பின்னர் இடையே இருந்த கோடு நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெய ராக பின்னர் உருவானது அதுவே உலக மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.
Yahoo (யாஹ¥)
இது ஒரு தேடற்பொறி என்பது யாவரும் அறிந்ததே. தொடக்கத்தில் இந்நிறுவ னத்தின் பெயர் “Jerry and David’s Guide to the world Wide web”  என்பதாக இருந்தது. 1994ல் யாஹ¥ என்ற பெயருக்கு மாறியது.
ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் “Yet Another Hierarchical Officious Oracle” என்ற சொற்றொடரின் சுரக்கமாக Yahoo என்பதைப் பயன்படுத்தினர்.
இந்தப் பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹ¥ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும் டேவிட் பைலோ ஆகிய இருவரும் அப்ப டிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங் களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெய ரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடு த்தனர்.
INTEL (இன்டெல்)
இந்நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon moore) என்பவர்களாவர். அவர் களின் புதிய நிறுவனத்தினை “Moor Noyce” என அழைக்க முதலில் முடிவு செய்தனர்.
ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குழுவிற்கு இருப்பது தெரியவந்தது. அப்போது “More noice” என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்த பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்து விட்டனர்.
பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் Integrated Electronics என்ற பெயரை சுருக்கி INTEL எனப் பெயர்வைத்தனர். அப்படியே இந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ்பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

நன்றி-
- * தினகரன்  இணையதளம் * -
மேலும் படிக்க கணினி துறையில் சாதித்த (பெயர்கள்) நிறுவனங்கள்(Most Popular Computer industry )